மட்டக்களப்பு மாவட்டத்தில் 176 கொரோனா தொற்றாளர்கள், மூன்று மரணம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 17, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் 176 கொரோனா தொற்றாளர்கள், மூன்று மரணம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (17.06.2021ல) 176 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொரோனாவினால் மூன்று மரணங்களும், இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோரும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் சட்ட விதிமுறைகளை மீறியோருக்கும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சீ.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும்களுவான்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில 36 பேரும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 பேரும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில 23 பேரும் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில 01 நபரும் வெள்ளாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 01 நபரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும் பொலிஸ் அதிகாரி 02 பேரும் சிறைச்சாலையில் 02 பேருமாக மொத்தம் 176 பேர் கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டனர். 

ஏறாவூர், காத்தான்குடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவராக மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment