வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 6 பேர் உள்ளிட்ட 32 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 6 பேர் உள்ளிட்ட 32 பேருக்கு கொரோனா

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 6 பேர் உட்பட 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின.

அதில், வவுனியா சிறைச்சாலை கைதிகள் பத்து பேருக்கும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், ஓமேக்கா ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஆறு பேருக்கும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், பெரியகோமரசங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், செட்டிக்குளம் கூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், குஞ்சுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கல்லாடங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், புலவன்ஊர் பகுதியில் ஒருவருக்கும், கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சீரா கட்டடவேலை நிறுவனத்தினர் ஒருவருக்கும், நவ்வி பகுதியில் ஒருவருக்கும் நெடுங்கேணியில் ஒருவருக்கும் என 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment