கொங்கோ குடியரசின் கிழக்கு பகுதியிலுள்ள கோமா நகர்ப்பகுதியில் எரிமலை வெடிப்பினால் 5 இலட்சம் (500,000) மக்களுக்கு குடிநீர் இல்லாமல் போய்விட்டதாக மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொலரா நோய்த் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் கிழக்கு நகரமான கோமாவில் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது என குறித்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நைராகொங்கோ மலைப் பகுதியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி எரிமலை வெடித்தபோது நீர்த் தேக்கம் மற்றும் குழாய்கள் சேதமடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் உள்ளார்கள்.
இடம்பெயர்ந்த மக்களின் உடனடி தேவைகளுக்கு நாங்கள் உதவுகிறோம், ஆனால் அது போதாது என மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) தொண்டு நிறுவனத்தின் கொங்கோ குடியரசின் பணித் தலைவர் மாகலி ரூடாட் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உதவ மற்ற மனிதாபிமான அமைப்புகளிடம் அவசர உதவியை கோருகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நகரங்கள், பாடசாலைகள், மசூதிகள் மற்றும் வீதிகளில் 100,000 முதல் 180,000 வரை மக்கள் திரண்டுள்ளார்கள். அருகிலுள்ள நகரமான சேக்கில் தனது குழுக்கள் மருத்துவ சேவைகளை வழங்கி வருவதாக எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.
கோமாவிலிருந்து 10 கி.மீ (ஆறு மைல்) தொலைவில் உள்ள நைராகோங்கோ மலைப்பகுதியில் எரிமலை வெடித்தில் 32 பேர் உயிரிழந்துள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உலகின் மிக சுறுசுறுப்பான எரிமலை ஒன்று வெடித்ததில் இருந்து பல நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆபத்து நிபுணர்களின் அளவை மதிப்பிடும் முயற்சியில், உருகிய எரிமலைக்குழம்பு தரையில் இருந்து குமுறும் இரண்டாவது பள்ளத்தின் மேல் ட்ரோன் கமராக்களை பறக்கவிட்டப்பட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment