(செ.தேன்மொழி)
சட்டவிரோத ஜீப் ரக வாகனமொன்றை பயன்படுத்தி வந்தமை தொடர்பில் கடுவலை நகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மோட்டார் வாகன திணைக்களத்தின் பதிவின்றி, சட்டவிரோதமாக ஜீப் ரக வாகனமொன்றை பயன்படுத்தி வந்தமை தொடர்பில் கடுவலை நகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி விவகாரம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்துள்ளதுடன், இதன்போது முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவலை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நகர சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுமார் ஐந்து வருட காலமாக இந்த ஜீப் வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவினர் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவரை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment