மூழ்கும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் 300 மெட்ரிக் தொன் எண்ணெய் : இலங்கை கடல் சூழலுக்கு பாரிய ஆபத்து - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

மூழ்கும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் 300 மெட்ரிக் தொன் எண்ணெய் : இலங்கை கடல் சூழலுக்கு பாரிய ஆபத்து

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பின்புறத்தில் ஏற்பட்ட நீர் கசிவின் காரணமாக அப்பகுதி நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை மாலை கப்பலின் பின் பகுதி கடலில் சரிய ஆரம்பித்தது. இன்று நண்பகல் வேலையில் பெரும்பகுதி கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

கப்பல் முழுமையாக மூழ்கும் பட்சத்தில் அதில் எஞ்சியுள்ள சரக்குகள், இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் என்பவை கடலில் கலக்கும் அபாயம் காணப்படுவதாக 'த பேர்ள்ஸ் பாதுகாப்பு' என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.

அத்தோடு இக்கப்பலில் 300 மெட்ரிக் தொன் எண்ணெய் காணப்படுவதாகவும், அந்த எண்ணெய் கசியும் பட்சத்தில் அது இலங்கை கடல் சூழலுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment