கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் : கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுத்துச் செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் : கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுத்துச் செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தம்

பாணந்துறை முதல் கொழும்பு ஊடாக கொச்சிக்கடை வரையான கடற் பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடித் திணைக்களம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் கப்பலில் ஏற்பட்ட சிதைவுகள் காரணமாக இன்று முற்பகல் முதல் MV X-Press Pearl கப்பல் மூழ்கி வருகின்றது.

மூழ்கும் கப்பலிலுள்ள பொருட்கள், அதன் பாகங்கள் மிதந்து வருவதன் காரணமாக ஏற்படும் அபாயங்களை தவிர்க்கும் வகையில் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மீன்பிடி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை குறித்த கப்பலின் பின் பகுதி மூழ்கி வந்த நிலையில், தற்போது அது கடலின் அடியை தட்டி உள்ளதால் அதனை ஆழ்கடலுக்கு எடுத்துச் செல்லும் இழுவை பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் அறிவித்துள்ளார்.

தற்போது வரை கப்பலில் எண்ணெய் கசிவுகள் எதுவும் தென்படவில்லை எனது கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் மூழ்கும் நிலையில் அது இலங்கை கடற் சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதனை கருத்திற் கொண்டு, அதனை ஆழ்கடலுக்கு எடுத்துச் செல்லுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் (01) உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment