பட்டப்பகலில் வீடொன்றில் நகைகள், பணம் கொள்ளை - திருடியவர் 24 மணி நேரத்துக்குள் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

பட்டப்பகலில் வீடொன்றில் நகைகள், பணம் கொள்ளை - திருடியவர் 24 மணி நேரத்துக்குள் கைது

சுன்னாகம் மயிலணியில் பட்டப்பகலில் வீடொன்றில் யன்னல் வழியாக நுழைந்து நகைகள் மற்றும் பணத்தைத் திருடியவர் 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் மயிலணியில் நேற்று பகல் வீட்டில் உள்ளவர்கள் வேலைக்குச் சென்றிருந்த வேளை யன்னல் வழியாக உள்ளே நுழைந்து இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு வழங்கப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான உதவிப் பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார், நல்லூரைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரை இன்று முற்பகல் கைது செய்தனர்.

அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்புடைக்கப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad