20,000 கோடி ரூபா குறைநிரப்பு ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

20,000 கோடி ரூபா குறைநிரப்பு ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

கொவிட் தடுப்பூசி கொள்வனவு மற்றும் கட்டுப்பாடு தொடர்பில் ரூ. 20,000 கோடி (ரூ. 200 பில்லியன்) குறைநிரப்பு ஒதுக்கீடு (supplementary estimate) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (22), 2021 இலக்கம் 01 எனும் குறித்த பிரேரணையை, ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு, அதனை, அரச நிதி தொடர்பான செயற்குழுவிற்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டுக்கான நிதியமைச்சின் வருடாந்த அறிக்கையையும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ பாராளுமன்றத்தில் முன்வைத்ததோடு அதனை நிதி தொடர்பான அமைச்சின் ஆலோசனை செயற்குழுவிற்கு அனுப்ப யோசனை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், 2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 6 (1) இன் கீழ் 01.04.2020 முதல் 30.04.2021 வரை, குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர கடன்கள் திட்டத்தால் வழங்கப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகளை தேசிய வரவு செலவு திணைக்கள, செலவு பிரிவு 240 இன் கீழ், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த குறைநிரப்பு ஒதுக்கீடு தொடர்பில் நாளைய தினம் (23) விவாதம் நடத்த, பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment