நாளை (03) முதல் இலங்கையிலுள்ள அனைத்து பிரதான தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்திற்கான பொதுமக்கள் உதவிக் கொடுப்பனவுகள், மருந்து விநியோகம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகளுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தபால் நிலையங்கள் வருபவர்கள், சேவை தொடர்பான உரிய அட்டைகள் அல்லது சிரேஷ்ட பிரஜைகள் அடையாள அட்டையை பாதுகாப்புப் பிரிவினருக்கு காண்பிப்பதன் மூலம் தபால் நிலையங்களுக்கு வர முடியுமென, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கொவிட்-19 முதலாவது அலையின் போது, அரச மருத்துவமனைகளில் கிளினிக்குகளின் போது வழங்கப்படும் மருந்துகளை வீடுகளிலுள்ள நோயாளிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் நாளை (03) முதல் ஆரம்பிக்கப்படுமென தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள், விளக்கங்கள் தேவையாயின், 1950 ஐ எனும் உடனடி தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment