இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக தெரிவானார் இட்சாக் ஹெர்சாக் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக தெரிவானார் இட்சாக் ஹெர்சாக்

கெனெசெட் சட்டமன்றில் 120 வாக்குகளில் 87 வாக்குகளைப் பெற்று, இஸ்ரேலின் பதினொறாவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஹெர்சாக் 2003 முதல் 2018 வரையான காலப்பகுதியில் கெனெசெட்டின் உறுப்பினராக பணியாற்றிதோடு, அந்தக் காலப்பகுதியில் நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் பதவி உட்பட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

வெற்றி பெறத் தேவையான 61 கெனெசெட் உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஹெர்சாக் 120 வாக்குகளில் 87 வாக்குகளைப் பெற்றார்.

இஸ்ரேலின் அடுத்த ஜனாதிபதியாக ஐசக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டதற்கு பிரதமர் நெதன்யாகு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நெதன்யாகு வாழ்த்துச் செய்தியில், "அனைத்து இஸ்ரேலிய குடிமக்களின் பெயரிலும் அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment