வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மலேசிய பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மலேசிய பிரதமர்

மலேசியாவின் பிரதமர் முஹைதீன் யாசின் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின், நேற்று முதல் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் அந்த அறிக்கையில் மேலதிக விபரங்கள் வழங்கப்படவில்லை.

No comments:

Post a Comment