காரைதீவு பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொண்ட 102 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை : 14 பேர் தொற்றாளராக அடையாளம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

காரைதீவு பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொண்ட 102 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை : 14 பேர் தொற்றாளராக அடையாளம்

மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் திங்கட்கிழமை (31) எழுமாறாக மேற்கொண்ட 102 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 14 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர், நுளம்பு தடுப்பு பிரிவினர்கள் ஆகியோர் இணைந்து காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் உள்ள மைதானங்கள், பொது இடங்கள் மட்டும் வீதியில் உலாவித் திரிந்தோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோர், சுகாதார நடைமுறைகளைப் பேனாதோர், பொலிஸார் என பலருக்கும் மேற்கொண்ட (102 பேருக்கான) அண்டிஜென் பரிசோதனையில் 14 நபருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதானது பிராந்திய மக்களுக்கு மிக முக்கியமான செய்தியை எத்தி வைத்துள்ளது.

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றின் பாதிப்பு கிழக்கிலும் அதிகமாக உள்ளதனால் சுகாதார வழிமுறைகளை சரியாக பின்பற்றி சுகாதார தரப்பினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் முழு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad