வாழைப்பழங்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பதற்கான அனுமதியை பெற மாவட்ட செயலர்களுடன் கலந்துரையாடப்படும் - அங்கஜன் இராமநாதன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

வாழைப்பழங்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பதற்கான அனுமதியை பெற மாவட்ட செயலர்களுடன் கலந்துரையாடப்படும் - அங்கஜன் இராமநாதன்

யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பதற்கான அனுமதியை பெறுவதற்காக மாவட்ட செயலர்களுடன் கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (31) நீர்வேலி வாழைக்குலை சங்கத்திற்கு விஜயம் மேற்கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடிய நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள covid-19 தாக்கத்தினால் பல்வேறு தொழில் துறையினரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு பாதிப்புகளை எதிர்நோக்கும் உற்பத்தித் தொழில் துறையினரை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. 

அதனடிப்படையில் அடிப்படைத் தேவைகளான உணவு பொருட்கள் எரிபொருள் மற்றும் நீர் விநியோகம் போன்றவற்றில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி அதற்கான செயற் திட்டங்களையும் உருவாக்கியுள்ளது. 

யாழ் மாவட்டத்தில் அதிக அளவிலான வாழைக்குலை செய்கையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு தமது உற்பத்திப் பொருட்களை வழங்குவதை கணிசமான பங்கை வகிக்கின்றனர். வாழைக்குலை செய்கையாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு நீர்வேலி வாழைக்குலை சங்கத்தினரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குத்தான் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை பெறும் இடங்கள் அனேகமாக தெரிந்திருக்க வாய்ப்புண்டு. 

யாழ்ப்பாணத்திலிருந்து வழமையாக எடுத்துச் செல்லப்படும் வாழை குலைகள் மட்டக்களப்பு, மன்னார், புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. ஆகவே யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வோர் தொடராக அப்பகுதி மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடி உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்லும் வர்த்தகர்கள் யாழில் இருந்து உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் இராணுவத்தினர்கள் மூலமும் வெளிமாவட்டத்திற்கு எடுத்து சென்று விற்பனை செய்வதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்படும் எனவும் தற்போது கோவிட்-19 நோய் தாக்காத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நோயளிகளுக்கு வாழைப்பழம் வழங்குவதற்க்கு குறைந்த விலையில் வைத்தியசாலைகளுக்கும் கோவிட்-19 தடுப்பு முகாம்களுக்கம் வழங்குமாறும் அறுவுறுத்தினார்.

No comments:

Post a Comment