தீ பரவியுள்ள MV X-Press Pearl கப்பலிலிருந்து வௌியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தினார்.
இலங்கை கடற்படையினரும், விமானப் படையினரும் ஏனைய பல தரப்பினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கப்பலிலிருந்து வெளியேறியுள்ள சிதைவுகள் வத்தளை முதல் நீர்கொழும்பு வரையான பகுதிகளில் கரையொதுங்கியுள்ளன.
இராசயன பொருட்களும் கப்பலில் இருந்துள்ளன. இதனால் அமில மழை பெய்யக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக கப்பலில் இருந்து அதிகமாக நைட்சஜன் டெக்ஷஸ் வாயு வெளியாகியுள்ளது.
இது மழையுடன் கலந்து நாட்டின் பல பாகங்களில் அமில மழை பெய்யக் கூடும். அமில மழை பெய்தால் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஆகவே, இந்தச் சிதைவுகள் பரவியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் நேரடியாக மழையில் நனைய வேண்டாம்.
இப்பகுதிகளிலேயே அதிக அமில மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளுக்கு பாரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. வாகனங்கள் மீது அமில மழை பெய்தால் பாதிப்படையக் கூடும் என்பதால் வாகனங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை கோரியுள்ளது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment