கடலில் கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஒவ்வாமை - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

கடலில் கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஒவ்வாமை

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

எக்ஸ்-பிரெஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய இரசாயன மற்றும் ஏனைய பொருட்கள் வத்தளை – ப்ரீதிபுர முதல் நீர்கொழும்பு வரையான கடற்கரையில் கரையொதுங்கின.

இதனையடுத்து, அந்தப் பொருட்களை தொட வேண்டாம் என கடல்சார் சமுத்திர பாதுகாப்பு அதிகார பை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

எனினும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி குறித்த பொருட்களை பலர் சேகரித்துச் சென்றனர். அவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad