கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்...! - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்...!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம், பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக, அத்தாட்சிப்படுத்தி, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டுள்ளார்.

இம்மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் திருத்தங்களுடன் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இன்று (27) முற்பகல் 11.30 மணிக்கு, குறித்த அத்தாட்சிப்பத்திரத்தில் சபாநாயகர் தனது கையொப்பத்தை இட்டுள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் (27) நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பில், சட்ட மூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

உயர் நீதிமன்ற பரிந்துரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக சட்ட மூலம் சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், குறித்த சட்ட மூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபைப்படுத்தியதில் இருந்து கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் மீதான கடுமையான விமர்சனங்களும், மாற்றும் கருத்துகளும் எதிர்க்கட்சியினராலும், ஆளும் தரப்பினராலும், நிபுணர்கள், கல்விமான்கள், தேரர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பாராளுமன்றத்தில் கடந்த மே 20ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad