அறிக்கை அளிக்க தவறினால் கலவரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் : மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

அறிக்கை அளிக்க தவறினால் கலவரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் : மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை

தேர்தல் முடிந்த பிறகு மே 3ஆம் திகதி நடைபெற்ற வன்முறை குறித்து அறிக்கை அனுப்பாவிடில், இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை பிடித்து 3ஆவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

மம்தா பானர்ஜி நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். வாக்கு எண்ணிக்கை 2ஆம் திகதி நடைபெற்றது. 

3ஆம் திகதி திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் - பாஜக தொண்டர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது.

இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து நாசமாக்கப்பட்டன. 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடி மேற்கு வங்காள ஆளுநரிடம் கலவரம் குறித்து கேட்டுக் கொண்டு, தனது கவலையை தெரிவித்தார். மத்திய அரசு சார்பாக உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வன்முறை குறித்து விளக்கம் அளிக்க மேற்கு வங்காள தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியது.

அந்த கடிதத்திற்கு தலைமை செயலாளர் இன்னும் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் அறிக்கை அளிக்கக்கோரி மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் ‘‘தேர்தலுக்குப் பின் நடந்த வன்முறை குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும். ஒருவேளை அறிக்கை அளிக்க தவறினால், இந்த விவகாரம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். 

எந்தவொரு நேரத்தையம் வீணடிக்காமல் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment