மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மூடல் - சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூல, செயன்முறை பரீட்சைகள் நிறுத்தம் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மூடல் - சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூல, செயன்முறை பரீட்சைகள் நிறுத்தம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வேரஹெர ஆகிய அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (03) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலஹகோன் தெரிவித்தார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் மாவட்ட செயலகங்களில் வாகன சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூல பரீட்சைகள் மற்றும் செயன்முறை பரீட்சைகள் என்பனவற்றை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், மாவட்ட செயலகங்களில் வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலஹகோன் தெரிவித்தார்.

அத்துடன், வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டிய அலுவலகங்களில் 011 2678877 எனும் இலக்கத்திற்கு அழைத்து முற்பதிவு செய்து கொண்டவர்களுக்கான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad