ஹோட்டல்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்கு தடை - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

ஹோட்டல்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்கு தடை

இன்று (01) முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இரவு 10 மணிக்கு பின்னர் ஹோட்டல்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் ஹோட்டல்கள், உணவு விடுதிகளில் மக்கள் ஒன்றுகூடும் வகையிலான செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணிக்கு பின்னர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு, மக்களிடையே தொற்று பரவாதிருக்கும் வகையில், இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடமும், களியாட்ட விடுதிகள் மற்றும் உரிமையாளர்களிடமும் இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad