இலங்கை இனப் பிரச்சினைக்கு ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் -வே.இராதாகிருஸ்ணன் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

இலங்கை இனப் பிரச்சினைக்கு ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் -வே.இராதாகிருஸ்ணன்

இலங்கையில் புரையோடி போயுள்ள இனப் பிரச்சினைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை பின்தள்ளி தி.மு.க அமோக வெற்றிப் பெற்றுள்ளது.

தி.மு.க வெற்றி பெற்றதால் புதிய தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியுள்ளதுடன் அவர் எதிர்வரும் 6 ஆம் திகதி முதலமைச்சராக பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஸ்டாலினின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இராதாகிருஸ்ணன் ஊடகங்களிடம் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தி.மு.க வின் வெற்றி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றியாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் வே.இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad