சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள், ஆலோசனைகளை புறக்கணிக்காது அவற்றுக்கேற்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள், ஆலோசனைகளை புறக்கணிக்காது அவற்றுக்கேற்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள், ஆலோசனைகளை புறக்கணிக்காது அவற்றுக்கேற்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மத்திய நிலையம் மேலும் கூறியுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில், வைரஸ் தாக்கம் காரணமாக மக்களது வாழ்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று சுகாதார பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைரஸ் பரவலை முறையாக கையாள்வது தொடர்பில் சுகாதார பிரிவும், துறைசார் தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியாக வழங்கி வரும் அறிவுறுத்தல்களை கருத்திற்கொள்ளாமல் அரசாங்கம் செயற்பட்பட்டு வருகின்றது.

அவர்களது கருத்துகளுக்கு முரணான வகையிலான திட்டங்களை செயற்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

அரசாங்கம் நாட்டின் யதார்த்த நிலைமையை உணர்ந்து கொண்டு அனைத்து துறையினரிடமும் உதவிகளை பெற்றுக்கொண்டு, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதோடு, மக்களை பாதுகாக்க வேண்டும். இதுவே சிறந்த அரசாங்கமொன்றின் கடமையாகும். ஆனால், அவர்கள் அதனை விடுத்து தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றனர்.

அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த சுயாதீன தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திவரும் எமது அமைப்பு, உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், அவர்களுக்காக மட்டுமன்றி அனைத்து மக்களுக்காகவும் முன்னின்று செயற்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தீர்மானம் மிக்க தருணத்தில் வைரஸ் பரவலை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக சிறந்த தீர்மானங்களை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றோம்.

அதற்கமைய, வைரஸ் பரவலை தடுப்பதற்காக சுகாதார அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை செயற்படுத்துவதுடன், பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

சுகாதார பிரிவினரின் கருத்துக்களை கவனிக்காது, அவற்றை தடுத்து நிறுத்த முயற்சிக்ககூடாது. நாட்டில் பயணக்கட்டுபாட்டை விதிக்க வேண்டும்.

மற்றும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதுடன், ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதாரண முறையில் அவற்றை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்போது, உழைக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தடுப்பதற்காக அனைத்து தொழிற்சங்களின் எண்ணங்களையும் அறிந்துகொண்டு, தொழிற்துறை அமைச்சரின் தலைமைத்துவத்தின் கீழ் விசேட செயலணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதுடன், சரிவடைந்துள்ள பொது போக்குவரத்து சேவையை, சுகாதார விதிகளுக்கமைய மீள செயற்படுத்துவதற்காக உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உரியமுறையில் செயற்படாவிட்டால் நாடு பாரிய இழப்புகளை சந்திக்க நேரிடும். அதனால் சுகாதார தரப்பினரிக் கருத்துகள் தொடர்பில் கவனம் செலுத்தி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment