'கொரோனாவை முழுமையாக இல்லாதொழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்' : யாழில் தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்ட ஆரம்பிப்பில் அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

'கொரோனாவை முழுமையாக இல்லாதொழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்' : யாழில் தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்ட ஆரம்பிப்பில் அமைச்சர் டக்ளஸ்

ஜனாதிபதியினால் யாழ். மாவட்டத்திற்கு முதற் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்த வைக்கப்பட்ட நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.

குறித்த தடுப்பூசிகள் பாதிப்பு அதிகமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், அரியாலை பிறப்பன் குளம் மகா மாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்திலும் அரியாலை பிரதேச மக்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அங்கு சென்ற அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நாமல் ராபக்ஷ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன் உட்பட்ட குழுவினர் தடுப்பூசி ஏற்றப்படும் செயற்பாடுகளை நேரடியாக அவதானித்ததுடன், பொது மக்களுடன் கலந்துரையாடினர்.

முன்பதாக யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்திருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டில் கொறோனா அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முழுமூச்சுடன் மேற்கொண்டு வருவதாகவும், பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கினால் விரைவில் மீள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்

மேலும், யாழ் மாவடடத்திற்கு முதற் கட்டமாக தடுப்பூசிகளை வழங்கி வைத்துள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏனைய மாவட்டங்களுக்கும் அடுத்த கட்டங்களில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment