வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருவருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 20 பொலிஸாருக்கு, அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த அன்டிஜன் பரிசோதனை முடிவிலேயே இரண்டு பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இருவரையும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்பினை பேணிய ஏனைய பொலிஸாரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad