இங்கிலாந்து வைரஸை விட இந்திய வைரஸின் பரவல் வேகம் இரண்டு மடங்கு அதிகம் - நிபுணர்கள் குழு ஆய்வில் தகவல் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

இங்கிலாந்து வைரஸை விட இந்திய வைரஸின் பரவல் வேகம் இரண்டு மடங்கு அதிகம் - நிபுணர்கள் குழு ஆய்வில் தகவல்

இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் தன்மைகளை பற்றி ஆய்வு செய்து கண்டுபிடிப்பதற்காக மத்திய நோய் தடுப்பு மையம் தலைமையில் இந்தியாவில் பல்வேறு நோய் கட்டுப்பாட்டு நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில கொரோனா 2ஆவது அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதற்கு இரட்டை உருமாற்ற வைரசே காரணமாகும்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவிய போது அங்குள்ள சூழ்நிலைகளுக்கு தகுந்த மாதிரி தன்னை உருமாற்றி கொண்டது.

அதேபோல் இந்தியாவிலும் மாநிலத்துக்கு மாநிலம் பல வகைகளில் உருமாற்றத்தை அடைந்துள்ளது. இதில், ஒரு சில வைரஸ்கள் மிக வீரியம் கொண்டதாக மாறி விடுகிறது.

இவ்வாறு இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த வைரஸ் வீரியத்துடன் வேகமாக பரவியது. அது தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவையும் அது தாக்கி இருக்கிறது.

அதே நேரத்தில் இந்தியாவில் உருவான இரட்டை உருமாற்ற வைரஸ் அதைவிட அதிக பாதிப்புகளை உருவாக்கியது.

இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் தன்மைகளை பற்றி ஆய்வு செய்து கண்டுபிடிப்பதற்காக மத்திய நோய் தடுப்பு மையம் தலைமையில் இந்தியாவில் பல்வேறு நோய் கட்டுப்பாட்டு நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் இந்தியாவில் பரவும் இரட்டை உருமாற்ற வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த வைரசுக்கு பி.1.617 என்று பெயரிடப்பட்டு இருந்தது. இங்கிலாந்து வைரசுக்கு பி.117 என்று பெயரிட்டு இருந்தனர்.

இரு வைரஸ்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தார்கள். அதில், இங்கிலாந்து வைரசை விட இந்திய வைரசின் பரவல் வேகம் 2 மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக இந்த ஆய்வு குழுவில் இருக்கும் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதாவது இங்கிலாந்து வைரசை விட இந்திய வைரசின் பரவல் திறன் 50 இல் இருந்து 70 சதவீதம் வரை அதிகமாக இருக்கிறது.

18 மாநிலங்களில் பரவிய இந்திய வைரசை இந்த ஆய்வுக்காக எடுத்துக் கொண்டார்கள். கேரளாவில் இந்திய உருமாற்ற வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அங்கு 2 மாதத்தில் 7 சதவீதம் கூடுதல் பரவலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய வைரஸ் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment