பண்டாரவளையில் அதிரடி காட்டிய பொலிஸார் ! முகக்கவசம் அணியாதவர்களைத் தூக்கிச் சென்றனர்! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

பண்டாரவளையில் அதிரடி காட்டிய பொலிஸார் ! முகக்கவசம் அணியாதவர்களைத் தூக்கிச் சென்றனர்!

பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலகவின் தலைமையில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, முகக் கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினைப் பின்பற்றாத 30 இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத சிலரை பொலிஸார் தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவமும் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment