தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடை மத்திய நிலையமாக ஜாமிஆ நளிமிய்யா - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடை மத்திய நிலையமாக ஜாமிஆ நளிமிய்யா

கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகின்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இடை மத்திய நிலையமாக பேருவளை ஜாமிஆ நளிமிய்யா கலாபீடம் பயன்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பொதுஜன பெரமுன கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோர் சுகாதார உத்தியோகத்தர்களுடன் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்கு கடந்த வார இறுதியில் நேரில் சென்று பார்வையிட்டனர்.

சுமார் 270 பேருக்கு சிகிச்சை அளிப்பதற்கான இடை மத்திய நிலையமாகப் பயன்படுத்துவதற்கு தேவையான சகல வசதிகளும் கடற்படையினரின் பங்களிப்புடன் இங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

இதேவளை, பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல், பேருவளை நகர சபைத் தலைவர் மஸாஹிம் முஹம்மத், பேருவளை பிரதேச சபைத் தலைவர் உட்பட பிரதேச மட்ட அதிகாரிகளும் இந்நிலையத்திற்கு நேற்று முன்தினமும் நேரில் சென்று பார்வையிட்டதோடு பாராளுமன்ற உறுப்பினர் தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

No comments:

Post a Comment