கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலங்கையில் மற்றுமொரு கர்ப்பிணித் தாய் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலங்கையில் மற்றுமொரு கர்ப்பிணித் தாய் பலி

கொரோனா வைரஸ் தொற்று நோயாளியான மற்றுமொரு கர்ப்பிணித் தாய் காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

45 வயதான இக் கர்ப்பிணித் தாய் அக்குரஸ்ஸ வில்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் கொழும்பில் நிறுவனமொன்றில் பணிபுரிந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

தனது முதலாவது குழந்தையைப் பெறுவதற்காக தயாரான நிலையிலேயே அத்தாய் மரணமடைந்துள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி அவருக்கு வைரஸ் தொற்று இனம் காணப்பட்டு, அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு வார காலம் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்துள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது. என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும் அவர்களோடு நெருங்கிய தொடர்புடைய மேலும் 17 பேர் வைரஸ் தொற்று நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளனர்.

இக்கர்ப்பிணித் தாயுடன் அவரது சிசுவும் மரணமடைந்துள்ள நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்த இரண்டாவது கர்ப்பிணித் தாய் இவரெனவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. 

முதலாவது வைரஸ் தொற்றுக்கு இலக்கான கர்ப்பிணி த்தாய் கடந்த வாரத்தில் றாகம ஆஸ்பத்திரியில் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment