இலங்கையில் விலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம் : லாப் கேஸ் நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

இலங்கையில் விலை அதிகரிப்பிற்கு அனுமதியில்லையேல் தட்டுப்பாடு ஏற்படலாம் : லாப் கேஸ் நிறுவனம்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்காவிடில், நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச். வெகபிட்டிய தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “சமையல் எரிவாயு இறக்குமதிக்கு செலவாகும் தொகைக்கு இணையாக சமையல் எரிவாயு விநியோகத்துக்கான செலவு காணப்படுகிறது. இது பாரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. 

ஆகையால், சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அவற்றை இறக்குமதி செய்வதில் பெரும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர்.

கேஸ் நிறுவனங்கள் நஷ்டமடையாமல் கொண்டு செல்வதாயின், 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 421 ரூபா அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு நடைபெறாவிடின், நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலை ஏற்படும்” என்றார்.

No comments:

Post a Comment