சூப்பஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
சென்னை போயஸ் தோட்ட இல்லத்திலேயே ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி இன்று (13) செலுத்திக் கொண்டார்.
ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment