பாராளுமன்றத்தில் கொரோனா வைரஸ்; சபாநாயகர் அலுவலகம் தற்காலிகமாக பூட்டு - News View

Breaking

Post Top Ad

Sunday, May 9, 2021

பாராளுமன்றத்தில் கொரோனா வைரஸ்; சபாநாயகர் அலுவலகம் தற்காலிகமாக பூட்டு

பாராளுமன்றத்தில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதால் சபாநாயகர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு அங்குள்ள பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

சுகாதாரப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சபாநாயகர் தற்காலிகமாக சபாநாயகர் அலுவலகத்துக்கு சமுகமளிப்பதை தவிர்த்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி கொரோன வைரஸ் சந்தேகத்திற்கிடமான நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து சபாநாயகர் அலுவலகம் உள்ளிட்ட அருகிலுள்ள அனைத்து பிரிவுகளும் கிருமித் தொற்று நீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை பாராளுமன்ற ஊழியர்கள் சிலர் வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கான அறிக்கை இன்று கிடைக்கலாமென பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad