தாய்மண்ணின் இருப்பை விட எதிர்கால வாக்கு வங்கியே பெரிதென நினைக்கிறார் ஆரிப் சம்சுதீன் : கல்முனை மாநகர சபை உறுப்பினர் சத்தார் சாடல் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 9, 2021

தாய்மண்ணின் இருப்பை விட எதிர்கால வாக்கு வங்கியே பெரிதென நினைக்கிறார் ஆரிப் சம்சுதீன் : கல்முனை மாநகர சபை உறுப்பினர் சத்தார் சாடல்

நூருல் ஹுதா உமர்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தனது தாயகமான கல்முனையை பிரிக்க சாணக்கியன் உட்பட தமிழ் எம்.பிக்கள் களமாடும் போது அதற்கு எதிராக கடுமையாக பேசுவார் என்று எதிர்பாத்த எல்லோருக்கும், கல்முனையை விட சாணக்கியனே முக்கியம் எனும் செய்தியை உறுதிபட தெரிவித்து அதிர்ச்சியான பதிலை கல்முனை மக்களுக்கு வழங்கியுள்ளார் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி. அப்துல் சத்தார் தெரிவித்தார்.

கல்முனையில் சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் இன்று (10) கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கல்முனையில் நல்ல அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து கிழக்கு மாகாண சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டு வடக்கையும் கிழக்கையும் பிரிக்க வேண்டும் எனும் சகோதரர் அதாஉல்லாவின் கொள்கையில் அவருடைய கிழக்கு கோஷத்தை பிரச்சாரம் செய்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்கள் தனது தாயகமான கல்முனையை பிரிக்க சாணக்கியன் உட்பட தமிழ் எம்.பிக்கள் களமாடும் போது அதற்கு எதிராக கடுமையாக பேசுவார் என்று எதிர்பாத்த எல்லோருக்கும் அதிர்ச்சியான பதிலை கல்முனை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

குறிப்பாக கல்முனைக்காக உரத்து குரல் கொடுத்து வரும் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் சமூகவலைத்தளத்தில் சில விமர்சனங்களை முன்வைத்துவிட்டு சாணக்கியன் உட்பட தமிழ் எம்.பிக்ககளின் நடவடிக்கைக்கு எதிராக எங்கும் பேச முன்வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை கல்முனையில் தலைமை தாங்கி வழிநடத்தியவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஆரிப் சம்சுதீன் அவர்களே. கல்முனை விடயத்தில் சாணக்கியனுக்கு எதிராக தன்னுடைய கடுமையான நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று நினைத்த கல்முனை மக்களுக்கு கல்முனையை விட சாணக்கியனே முக்கியம் எனும் செய்தியை உறுதிபட தெரிவித்துள்ளார்.

நான் ஆராய்ந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மாகாண சபையில் கூட்டிணைந்து போட்டியிடும் நிலை வரும்போது சாணக்கியன் எம்.பியை கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நப்பாசையில் இந்த ஆதரவு போக்கை பின்பற்றுகிறார். 

சொந்த தாய்க்கு ஒப்பான பிறந்த மண்ணை ஆக்கிரமித்து கைப்பற்ற இனவாதிகள் துடிக்கும் போது அந்த மண்ணை காப்பாற்ற முன்களத்திற்கு வருவதா? அல்லது விடுத்து பதவியாசையை அடைய எதிரிக்கு ஒத்தாசை புரிந்து மண்ணை காட்டிக் கொடுப்பதா? இப்படிப்பட்டவர்களுக்கு எவ்வகையான சொல்லை பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு சட்டத்தரணியாக இருந்த போதிலும் கல்முனை முஹையத்தீன் ஜும்மா பள்ளிவாசலின் தலைமையிலான கல்முனை விவகார நடவடிக்கைகளுக்கான குழுவில் பங்குபற்றி பங்களிப்பும் செய்யாத ஒருவர். அதேபோன்று உயர்பீடத்திலும் இது தொடர்பில் ஒரு வார்த்தையேனும் பேசாதவர் நீங்கள். பொதுவெளியில் கூட கல்முனை மாநகரம் முஸ்லிங்களுக்கு சொந்தமானது அதை துண்டாட அனுமதிக்க முடியாது என்ற கருத்தை முன்வைக்காதவர். 

ஆனால் தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிங்களினதும், கல்முனை மக்களினதும் வாக்குகள் மட்டும் உங்களுக்கு தேவை. இனி நீங்கள் சந்திக்கப்போகும் தேர்தல்களில் இதற்கான பிரதியுபகாரத்தை மக்கள் தெளிவான தீர்ப்பாக உங்களுக்கு வழங்குவார்கள்.என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad