சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி மாவட்டங்கள் அதிக பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி மாவட்டங்கள் அதிக பாதிப்பு

சீரற்ற காலநிலையின் காரணமாக இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

கடந்த மூன்று தினங்களாக, இம்மாவட்டங்களில் கடும் காற்று, வெள்ளப் பெருக்கு, மண்சரிவு அபாயம், கற்பாறைகள் சரிந்து விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.

இவற்றின் காரணமாக மூன்று மாவட்டங்களிலும் ஏறத்தாழ 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையம் இன்று (26) விடுத்த அறிக்கையில், பாதிப்புகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையின் விளைவுகளால் இரத்தினபுரி மாவட்டத்தில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 276 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம்.

கண்டி மாவட்டத்தில் கடும் காற்று காரணமாக கடந்த இரு தினங்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 30 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களால் 65 குடும்பங்களைச் சேர்ந்த 276 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 12 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பொது இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

நாவலப்பிட்டி - ஹரங்கல வீதியில் கொத்மலை நீர்த் தேக்கத்திற்கு அருகில் நிலம் தாழிறங்கி உள்ளது. இந்த இடத்தை நிபுணர்களுடன் சென்று அதிகாரிகள் பார்வையிட்டதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாதையில் நிலம் தாழிறங்கியதால் கொத்மலை நீர்த் தேக்கத்தில் பாதிப்பு இல்லை என்பதை நீர்த் தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். வீதியை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நாவலப்பிட்டி - ஹரங்கல வீதிக்கு பதிலாக மாற்றுப் பாதையை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள

(எம்.ஏ. அமீனுல்லா)

No comments:

Post a Comment