ரமழான் உணர்த்தும் உன்னதமான படிப்பினைகளை எமது வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம் ஒழுக்கமுள்ள இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் ஒற்றுமை என்னும் கயிற்றை இலங்கையர்களாகிய நாம் இறுகப் பிடித்துக்கொள்வோமானால் எமக்கெதிரான சர்வதேச அஜந்தாக்களை முறியடிக்க முடியும் என தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா அமைப்பு தெரிவித்துள்ளது.
எமது செயற்பாடுகளை நாங்கள் சீர்செய்து கொண்டு ஒழுக்க சீலர்களாக முன்மாதிரி மிக்க சமூகத்தினராக முஸ்லிங்கள் இருக்க வேண்டும். இதற்கான பாடங்களையும் ரமழான் எமக்கு செயற்பாட்டு ரீதியில் கற்றுத்தருகின்றது.
இத்திருநாளில் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா அலையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பாக வீட்டில் இருந்து கொண்டு சந்தோஷமாக பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஈத் முபாரக்!.
நாட்டில் இன நல்லிணக்கம் சமத்துவம் நீடிப்பதற்கும் முஸ்லிம்கள் எச்சந்தர்பத்திலும் ஒற்றுமையாக இருப்பதற்கும் இத்திருநாளில் அனைவரும் பிரார்த்தனை செய்யவேண்டும் .
No comments:
Post a Comment