தேவைப்பட்டால் நாட்டை முடக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் - தொற்றுக்குள்ளாவோருக்கு வீடுகளிலேயே சிகிச்சை வழங்க வேண்டி ஏற்படும் : அமைச்சர் சுதர்ஷனி - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

தேவைப்பட்டால் நாட்டை முடக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் - தொற்றுக்குள்ளாவோருக்கு வீடுகளிலேயே சிகிச்சை வழங்க வேண்டி ஏற்படும் : அமைச்சர் சுதர்ஷனி

எதிர்காலத்தில் தேவைப்பட்டால் நாட்டை முடக்க வேண்டிய நிலையும் ஏற்படலாமென இராஜாங்க அமைச்சர் திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தொற்று நோயியல் பிரிவே நாட்டை முடக்குவது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டது. அரசியல்வாதிகள் இது குறித்து தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், தற்போதைய தொற்று நிலைமையை விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

தேவைக்கு ஏற்ப சில பிரதேசங்கள் தற்போது தனிமைப்படுத்தப்படுகின்றன. கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் பிரதேசங்களைத் தனிமைப்படுத்துவதற்கான அதிகாரம் பிரதேச சுகாதாரப் பணிப்பாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒன்றிணைந்து தீர்மானிக்க முடியும். இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் அறிவிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகி வீடுகளில் இருப்போருக்கு வீடுகளிலேயே சிகிச்சை வழங்க வேண்டி ஏற்படும். இதற்கு தேவையான வழிகாட்டி ஆலோசனை தற்போது தயாரிக்கப்படுகிறது. 

அனைத்து மாவட்டங்களிலும் ஆகக்குறைந்தது 2000 கட்டில்களைக் கொண்ட சிகிச்சை மத்திய நிலையம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment