கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் மூன்றாம் அலையின் பின்னர் கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதனால் மவட்டத்தில் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்டம் பூராகவும் சுகாதாரத் துறையினரும், முப்படையினரும் இணைந்து பல்வேறு விழிப்புணர்பு நடவடிக்கைகள் மற்றும் இறுக்கமான கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை கிரான் பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment