ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்துள்ள அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்துள்ள அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம்

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

எதிர்வரும் 31.05.2021 ற்கு முன் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றத்தவறும் பட்சத்தில் 01.06.2021 அன்று நண்பகல் 12.00 முதல் 1.00 மணி வரை அடையாள பணிப் புறக்கணிப்பு செய்ய அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. 

எனவே தங்கள் வைத்தியசாலைகளில் இக்கோரிக்கைகளை வென்றெடுக்க அனைத்து தாதியர்களையும் ஒன்றிணைத்து தயார்படுத்துமாறு அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த வகையில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினால் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

1. தாதிய உத்தியோகத்தர்களின் குடும்பத்தினருக்கும் ஏனைய சுகாதாரத் துறையினரின் குடும்பத்தினருக்கும் கோவிட் தடுப்பூசி ஏற்றல்.

2. அனைத்து தாதியருக்கும் ரூபா 5000 ரூபா இடர் கொடுப்பனவு வழங்குதல்.

3. புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 4000 தாதிய உத்தியோகத்தர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றல்.

4. கர்ப்பிணி தாதிய உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்கல்.

5. கொவிட் பரிசோதனை பிரிவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு போதிய வழங்களை வழங்குதல், 

6. பயணத்தடை காலத்தில் தாதிய உத்தியோகத்தர்களுக்கு கடமைக்கு வருகை தருவதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

7. கொரோனா சிகிச்சை மையங்களிலும் ஏனைய சுகாதாரசார் நிறுவனங்களிலும் கடைமை புரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு N 95 முகக் கவசம் மற்றும் உரிய பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட வேண்டும்.

எனவே எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் குடும்பத்தினருக்கான தடுப்பூசி ஏற்றலுக்கு மட்டுமே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய கோரிக்கைகளான இடர்கால கொடுப்பனவு, கர்ப்பிணி தாதியருக்கான விடுமுறை தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்தாமை போன்ற ஏனைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையால் 25.05.2021 மாலை முதல் வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதாரசார் நிறுவனங்களிலும் தாதியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைச் யெற்பாடுகளிலிருந்து தாதிய உத்தியோகத்தர்கள் முற்றாக விலகியிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் அறியத்தருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad