தாய் இறந்த துக்கத்திலும் கடமை தவறாத அம்புலன்ஸ் ஓட்டுநர்- 15 கொரோனா நோயாளிகளை காப்பாற்றினார் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

தாய் இறந்த துக்கத்திலும் கடமை தவறாத அம்புலன்ஸ் ஓட்டுநர்- 15 கொரோனா நோயாளிகளை காப்பாற்றினார்

உத்தரப் பிரதேசத்தில் தாய் இறந்த செய்தி கேட்டும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் உடனடியாக செல்லாமல் தனது பணி நேரம் முடிந்த பிறகே சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இளைஞர் மதுராவில் ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். 9 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் இவர். முதல் அலையின் போதும், இப்போதும் ஆம்புலன்ஸ் ஓட்டி மக்கள் சேவையாற்றி வருகிறார். 

இந்நிலையில் அவரது தாயார் கடந்த 15ந் தேதி மரணம் அடைந்தார். பிரபாத் இரவுப்பணியில் இருக்கும்போது அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நோயாளிகள் பலரையும் மருத்துவமனை அழைத்து வர வேண்டும் என்பதால் அவர் பணியில் இருந்து பாதியிலேயே செல்லவில்லை.

இரவு முழுவதும் 15 நோயாளிகளை அவர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அதன் பிறகே தனது கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார். 

மேலும் தாயின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு 24 மணி நேரத்தில் பணிக்கு திரும்பினார். கடந்த ஆண்டு ஜூலையில் பிரபாத்தின் தந்தை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.

அப்போதும் தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு பிரபாத் பணிக்குத் திரும்பினார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபாத்தின் இந்த அர்ப்பணிப்பு உணர்வுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment