சீனா வழங்கிய 5 இலட்சம் டோஸ்களில் ஒரு தொகுதி 2ஆம் டோஸாக வழங்கப்படும் : 125,000 டோஸ்கள் குருணாகல், காலி, மாத்தறை மக்களுக்கு : ரஷ்ய Sputnik V 50,000 டோஸ்கள் இன்று நள்ளிரவு இலங்கைக்கு வருகிறது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

சீனா வழங்கிய 5 இலட்சம் டோஸ்களில் ஒரு தொகுதி 2ஆம் டோஸாக வழங்கப்படும் : 125,000 டோஸ்கள் குருணாகல், காலி, மாத்தறை மக்களுக்கு : ரஷ்ய Sputnik V 50,000 டோஸ்கள் இன்று நள்ளிரவு இலங்கைக்கு வருகிறது

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டு நேற்றையதினம் (26) கிடைக்கப் பெற்ற 5 இலட்சம் டோஸ் Sinopharm தடுப்பூசிகளின் 375,000 டோஸ்களை, முதலாவது டோஸ் பெற்றவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

Sinopharm தடுப்பூசியை முதலாவது டோஸாக பெற்றவர்களுக்கு இவ்வாறு இரண்டாம் டோஸாக அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு 2ஆம் டோஸ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜூன் 08ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த 5 இலட்சம் டோஸ்களில் ஏனைய 125,000 டோஸ்களை, குருணாகல், மாத்தறை, காலி மாவட்ட மக்களுக்கு முதலாவது டோஸாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்தார்.

நேற்றையதினம் கிடைக்கப் பெற்ற குறித்த தடுப்பூசிகளை நேற்று (26) முதலே ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ரஷ்ய நாட்டின் உற்பத்தியான Sputnik V தடுப்பூசியின் 50,000 டோஸ் தடுப்பூசிகள் இன்று நள்ளிரவு இலங்கையை வந்தடையவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி ​15,000 டோஸ் கடந்த 03ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது.

இதேவேளை, சீனாவிடமிருந்து அரசாங்க மருந்தாக்க கூட்டுத்தாபனம் சீனாவிடமிருந்து கொள்வனவுக்காக கோரப்பட்டுள்ள, மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் ஜூன் இரண்டாம் வாரத்தில் கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் 14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் மற்றும் ஒரு மில்லியன் AstraZeneca தடுப்பூசிகளின் கொள்வனவுக்கு, இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment