மட்டக்களப்பில் சிகிச்சை பெற்று வந்த இரு கொரோனா தொற்றாளர்கள் மரணம் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

மட்டக்களப்பில் சிகிச்சை பெற்று வந்த இரு கொரோனா தொற்றாளர்கள் மரணம்

மட்டக்களப்பில் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த இரு கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், கரடியனாறு கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியுமாக இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரடியனாறு - கித்தூள் கிராமத்தைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்ததாகவும் மற்றயவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும் இவர் இன்று சனிக்கிழமை காலை உயிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad