இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சத்தை கடந்த தொற்றாளர்கள் - 3,523 பேர் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சத்தை கடந்த தொற்றாளர்கள் - 3,523 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்து அதிர்ச்சி அளித்து உள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 இலட்சத்து ஓராயிரத்து 993 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இதனால் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 91 இலட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,523 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 இலட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 56 இலட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுவரை மொத்தம் 32,68,710 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியே 49 இலட்சத்து 89 ஆயிரத்து 635 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது. நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 இலட்சம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad