ஆயுர்வேத வைத்தியசாலைகள் கொவிட் மத்திய நிலையங்களாகவே தொழிற்பட வேண்டும் - இலங்கை அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

ஆயுர்வேத வைத்தியசாலைகள் கொவிட் மத்திய நிலையங்களாகவே தொழிற்பட வேண்டும் - இலங்கை அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம்

(நா.தனுஜா)

நாட்டிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகள் கொவிட்-19 தொற்றுக்கு 'ஆயுர்வேத' சிகிச்சையளிக்கும் மத்திய நிலையங்களாகவே தொழிற்பட வேண்டும் என்று இலங்கை அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரசாத் ஹெந்தவிதாரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது பொரளை ஆயுர்வேத சிகிச்சை போதனா வைத்தியசாலை உள்ளடங்கலாக நாட்டிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகள் கொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மத்திய நிலையங்களாக மாற்றப்படக்கூடாது.

மாறாக அவை கொவிட்-19 தொற்றுக்கு 'ஆயுர்வேத' சிகிச்சையளிக்கும் மத்திய நிலையங்களாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். உள்நாட்டு ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களைப் பின்தள்ளுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

பல்லேகல ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த 6 மாத காலமாக கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதுடன் அங்கு ஒரு நோயாளரின் நிலைகூட மோசமடையவில்லை. அதேபோன்று உயிரிழக்கவும் இல்லை. அத்தோடு இந்த சிகிச்சை வழங்கலுக்காக பொரளை ஆயுர்வேத போதனா வைத்தியசாலை தயார் நிலையில் உள்ளது.

தற்போது அங்கு தொற்று ஏற்படாதவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே உள்நாட்டு மருத்துவ முறைகள் தொடர்பில் யாரும் அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. 

கடந்த காலத்தில் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தயாரித்த பாணியை அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக பலரும் பிரசித்தப்படுத்தினார்கள். எனினும் அதில் காணப்படும் சிக்கல் குறித்து நாம் கூறினோம். அதனால் உண்மையான, பாரம்பரிய முறையிலான ஆயுர்வேத சிகிச்சை முறையில் மாத்திரம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அதேபோன்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றார். அவர் படித்த, தொழில்புரியும் துறைக்கு அப்பால் சென்று, அவரறியாத விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment