நோர்வூட் பிரதேச சபைத் தலைவருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

நோர்வூட் பிரதேச சபைத் தலைவருக்கு கொரோனா

நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேல் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட என்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக நோர்வூட் பிரதேச சபைத் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 13 ஆம் திகதி மாதாந்த சபை அமர்வு இடம் பெற்றமையினால் சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாகவும் நோர்வுட் பிரதேச சபை காலவரையின்றி மூடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment