மே மாத ஓய்வூதியம் இன்றும், நாளையும் தபாலகங்களில் 09.30 முதல் 2.00 மணி வரை பெறலாம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

மே மாத ஓய்வூதியம் இன்றும், நாளையும் தபாலகங்களில் 09.30 முதல் 2.00 மணி வரை பெறலாம்

வரையறுக்கப்பட்ட சேவை வழங்கல் நடவடிக்கைக்காக தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் காலை 9.30 - பி.ப. 2.00 மணிவரை திறந்திருக்கும்.

கொவிட்-19 தொற்று நிலைமையின் மூன்றாம் பரவலுடன் நாடளாவிய ரீதியில் பயணக்காட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால், 2021 மே மாதத்திற்குரிய ஓய்வூதியம், விவசாயம் / மீனவர் ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு மற்றும் பொதுசன மாதாந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலாது போனவர்களுக்கு குறித்த கொடுப்பனவுகளை மாத்திரம் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் அங்கீகாரத்துடன், இக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்கள் தங்களுடைய ஓய்வூதிய அடையாள அட்டை மற்றும் மேற்கூறிய கொடுப்பனவுகளுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தபால் அலுவலகங்களுக்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமங்களால் ஏதேனும் அலுவலகங்கள் திறக்கப்படாவிட்டால் 1950 என்ற துரித அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment