பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அதி சொகுசு வாகனம் எதுவும் கொள்வனவு செய்யப்படமாட்டாது - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அதி சொகுசு வாகனம் எதுவும் கொள்வனவு செய்யப்படமாட்டாது

நாடு நெருக்கடியான நிலைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் எம்.பிக்களுக்கு அதி சொகுசு வாகனம் எதுவும் கொள்வனவு செய்யப்பட மாட்டாதென இணை அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எம்.பிக்களுக்கு சொகுசு வாகனம் கொள்வனவு செய்ய திட்டமிடப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. 

இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் தெளிவான ஊடக அறிக்கை வெளியிட்டது. இவ்வாறான வாகன கொள்வனவு நடைபெறாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சிக்கு வந்தவுடன் தனது ஊழியர் குழாமை குறைத்து வாகன எண்ணிக்கையை குறைத்து, எரிபொருள் செலவை குறைத்து 03 பில்லியன் ரூபா நாட்டுக்காக மீதப்படுத்தியுள்ளார். 

செலவுகளை குறைக்கும் மனப்பாங்குள்ள ஜனாதிபதியுள்ள நாட்டில் இவ்வாறான செலவுகளுக்கு இடமளிக்கமாட்டாரெனவும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad