தனது சாதனையை புதுப்பித்தார் இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 15, 2021

தனது சாதனையை புதுப்பித்தார் இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர்

எம்.எம்.சில்வெஸ்டர்

இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரரான யுப்புன் அபேகோன் தனக்கு சொந்தமாகவிருந்த 100 மீற்றர் ஓட்டப் போட்டிச் சாதனையை புதுப்பித்துக் கொண்டார்.

இத்தாலியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சிட்டா டி சவோனா வல்லவர் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற யுப்புன் அபேகோன் 10.15 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாமிடம் பிடித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 10.16 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளைப் படைத்த யுப்புன் அபேகோன் தற்போது தனது சொந்த சாதனையை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார்.

இத்தாலியின் சிட்டா டி சவோனா வல்லவர் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியில் 10.13 செக்கன்களில் நிறைவு செய்த பட்டா லொரேன்ஸோ முதலிடத்தையும், 10.15 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கையின் யுப்புன் அபேகோன் இரண்டாவது இடத்தையும், 10.25 செக்கன்களில் ஓடி முடித்த இத்தாலியின் மற்றுமொரு வீரரான மெல்லுஸோ மெட்டியோ மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர்.

No comments:

Post a Comment