வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி

பயணிகள் விமான சேவைகளை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

அதன் மூலம் வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத்தடை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நீக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு விமானத்தில் 75 பயணிகள் பயணிக்க முடியமென்ற கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் எவ்வாறாயினும்கடந்த 14 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் பயணிகளுக்கு தொடர்ந்தும் விமானங்களில் பயணிப்பதற்கான அனுமதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கைக்கான கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை வைத்திருப்பவர்களும் நாடு திரும்புவதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் கிடையாதென குறிப்பிட்டுள்ள அமைச்சர், இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றுலா அதிகாரசபைக்கு அறிவித்து அதன் அனுமதி பெற்றே இலங்கைக்கு வருகை தர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த 11 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டல் கோவைக்கிணங்க இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்வது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad