கொரோனா தொற்றினால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

கொரோனா தொற்றினால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

கொரோனா பாதிப்பின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார். அவருக்கு வயது 74.

கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். 

பாண்டு - குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த நடிகர் பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். 

அ.தி.மு.க கட்சியின் கொடியை வடிவமைத்ததும் பாண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment