ஐந்து அலுவலக ரயில் சேவைகள் இரத்து - கடிதங்கள், பொதிகளை பகிர்ந்தளிப்பதில் இடையூறு இல்லை - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

ஐந்து அலுவலக ரயில் சேவைகள் இரத்து - கடிதங்கள், பொதிகளை பகிர்ந்தளிப்பதில் இடையூறு இல்லை

ஐந்து அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.

ரயில் சாரதி உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நேற்றுமுன்தினம் சேவையில் ஈடுபட்ட ஏனைய சாரதிகளை PCR சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் 23 ரயில் சேவைகள் நேற்றுமுன்தினம் (06) மாலை இடைநிறுத்தப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார்.

பிரதான மார்க்கத்தில் பொல்கஹவெல மற்றும் குருநாகலில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில்களும், அளுத்கயிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் ரயிலும், கொழும்பு கோட்டையிலிருந்து பொல்கஹவெல நோக்கி பயணிக்கும் ரயிலும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, தபால் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், கடிதங்கள் மற்றும் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என மத்திய தபால் பரிமாற்றகம் அறிவித்துள்ளது.

மத்திய தபால் பரிமாற்றகத்தின் வாகனங்களின் மூலம் உரிய வகையில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தபால் அத்தியட்சகர் அஸ்லாம் ஹசன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment