இராணுவ சோதனைச்சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்கிறார் அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, May 3, 2021

இராணுவ சோதனைச்சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

இராணுவ சோதனைச்சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு நேற்று (02) வருகை தந்திருந்த அவர், ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கொரோனா என்பது இலங்கையில் மாத்திரமல்ல எல்லா நாடுகளிலுமே தற்போது பாரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. சில நாடுகளில் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவையும் குறிப்பிடலாம். ஆனால் இலங்கையை பொறுத்தவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் சில கவனக்குறைவு காரணமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இருந்த போதும் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அதேபோன்று விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களை கூட கட்டுப்படுத்தி இருக்கின்றது.

வெளிநாடுகளில் இருந்து பரவுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும்கூட அவ்வாறு நடைபெறாமல் குறைக்கப்பட்டுள்ளது. முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முழுமையாக முடக்குவதில் எவ்வித பிரயோசனம் இல்லை.

எமது நாடு மட்டுமல்லாது அனைத்து நாடுகளுமே தங்களது நாட்டினை முடக்கும் நிலைக்கு உட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளே மாத்திரமே அந்த அரசாங்கங்கள் முடக்கி வருகின்றது. அவ்வாறு நாட்டினை முடக்கும் சந்தர்ப்பத்தில் நாடு பட்டினியில் மரணிக்க வேண்டி வரும். அதற்காகத்தான் எமது அரசாங்கம் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை சுகாதார முறைகளில் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக வீதியிலே இருக்கின்ற இராணுவ சோதனைச்சாவடிகளில் இராணுவத்தினர் முகக்கவசம் அணியாதவர்களை மறித்து அணிந்து செல்லுமாறு அறுவுறுத்தி வருகின்றனர். மேலும் இராணுவ சோதனைச்சாவடிகள் எங்களிற்கு வசதியாக இருப்பதுடன் நாங்கள் அதனை வசதியாக மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர அதனை கெடுபிடி என்று அதனை நோக்கக்கூடாது. 

அவர்கள் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அதனை சொல்லுவதற்கும் ஒருவர் தேவைதானே. அதனைத்தான் அவர்கள் செய்து வருகின்றனர். ஆகவே சோதனை சாவடி இருப்பதால் முகக்கவசம் அணிய வேண்டும் என அனைவரும் கவனமாக இருப்பார்கள். அத்தோடு சோதனைச்சாவடி நிரந்தரமாக்க வேண்டிய தேவை இல்லை.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment