அம்மா உணவக பெயர்ப் பலகையை நீக்கிய தி.மு.கவைச் சேர்ந்த இருவரை கட்சியிலிருந்து நீக்கினார் ஸ்டாலின் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

அம்மா உணவக பெயர்ப் பலகையை நீக்கிய தி.மு.கவைச் சேர்ந்த இருவரை கட்சியிலிருந்து நீக்கினார் ஸ்டாலின்

அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய தி.மு.கவினர் இருவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த பெயர்ப் பலகைகளை தி.மு.கவைச் சேர்ந்த இருவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பான காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகையை நீக்கிய தி.மு.கவைச் சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்து மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். 

மேலும், உணவகத்தின் பெயர்ப் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தவும், 2 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad